வீடு புகுந்து திருட முயற்சி

நெல்லையில் வீடு புகுந்து திருட முயன்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-06-23 18:52 GMT

நெல்லை பெருமாள்புரம் மகிழ்ச்சி நகரைச் சேர்ந்தவர் பாபு. இவர் குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றார். இந்த நிலையில் இவரது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக பெருமாள்புரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே போலீசார் அந்த வீட்டுக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தியபோது, அங்கு எந்த பொருட்களும் திருடுபோகவில்லை என தெரிய வந்தது.

எனவே பாபுவின் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், கதவுகளை உடைத்து திருட முயன்றது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடு புகுந்து திருட முயன்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்