கொடநாடு வழக்கில் உண்மை விரைவில் வெளிவரும்- முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மை விரைவில் வெளிவரும் என்று தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு தேர்தல் பிரசாரத்தின் போது பேசினார்.

Update: 2023-02-25 08:39 GMT

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. இதையொட்டி அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக தலைவரும் முதல் அமைச்சருமான மு.க ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதா மரணம் குறித்து தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகுதான் விசாரணை கமிஷன் அறிக்கை என்ன நிலை என்பதை மக்களிடத்தில் விளக்கி இருக்கிறோம். இதேபோல் தன்னை வளர்த்து தன்னை ஆளாக்கிய தாங்கள் தலைவராக ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா வீட்டிலேயே கொள்ளையடித்தவர்கள் அவர்கள்.

கொடநாட்டிலே கொள்ளையடித்தவர்கள் அவர்கள், கொலை செய்தவர்கள் அவர்கள். அந்த விபரம் எல்லாம் விரைவில் வரப்போகிறது. அதற்கு யார் காரணமாக இருந்தாலும் உறுதியாக சொல்கிறேன். அத்தனை பேரையும் பிடித்து ஜெயிலில் போடுவோம். இவ்வளவு அக்ரமங்களையும் செய்துவிட்டு தைரியமாக சுதந்திரமாக இன்று திரிந்து கொண்டு அந்த அம்மா பெயரை சொல்லிக்கொண்டு ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்

Tags:    

மேலும் செய்திகள்