சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து
சாலையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
புதுக்கோட்டை-குடுமியான்மலை சாலையில் ஜல்லிக்கற்களை ஏற்றிசென்ற லாரி ஒன்று பெருமநாடு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஜல்லிக்கற்கள் சாலையில் கொட்டின. இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. பின்னர் சாலையின் குறுக்கே கவிழ்ந்த லாரியை பொக்லைன் எந்திரம் உதவியுடன் மீட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.