ஆசனூர் அருகே லாரி கவிழ்ந்து விபத்து சிதறி கிடந்த கரும்பை சுவைத்த யானைகள்

லாரி கவிழ்ந்து விபத்து

Update: 2022-06-10 16:02 GMT

தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றிய லாரி ஒன்று நேற்று காலை புறப்பட்டது. பகல் 11 மணி அளவில் ஆசனூர் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். மேலும் லாரியில் இருந்த கரும்புகள் வனப்பகுதியில் சிதறியது.

அப்போது வனப்பகுதியில் இருந்து யானைகள் கூட்டமாக லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான இடத்துக்கு வந்தன. இதைத்தொடர்ந்து லாரியில் இருந்து சிதறி கிடந்த கரும்புகளை யானைகள் சுவைக்க தொடங்கின. லாரிகள் அருகில் யானைகள் கூட்டமாக நின்றதால், லாரியை மீட்கும் பணி நடைபெறவில்லை. பின்னர் வனத்துறை உதவியுடன் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணி நடந்தது. வனப்பகுதிக்குள் சென்ற பிறகு கரும்புகள் வேறு லாரியில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது. சாலையோரத்தில் லாரி விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்