மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்:சுமை தூக்கும் தொழிலாளி சாவு

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் சுமை தூக்கும் தொழிலாளி இறந்து போனார்.

Update: 2023-05-04 18:45 GMT

தூத்துக்குடி பெரியசாமிநகரை சேர்ந்தவர் வேம்பு. இவருடைய மகன் பாஸ்கர் (வயது 28). இவர் தனியார் குடோனில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தூத்துக்குடி துறைமுகம் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த லாரியும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகின. இதில் பலத்த காயம் அடைந்த பாஸ்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் தெர்மல்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்