மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; வாலிபர் சாவு

கீரனூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் வாலிபர் பலியானார். சிறுவன் படுகாயமடைந்தார்.

Update: 2022-11-10 18:50 GMT

வாலிபர் பலி

கீரனூர் அருகே வடுதாவயல் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் ஆனந்தகுமார் (வயது 18). இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த வாரம் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த உறவினர் கருப்பையா மகன் ராஜேந்திரன் (15) என்பவருடன் வயலில் கடலை செடிகளை பறிப்பதற்காக இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளை ஆனந்தகுமார் ஓட்டினார். தெம்மாவூர் மெயின் ரோட்டில் வந்த போது, இவர்களுக்கு பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக ஆனந்தகுமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டதில் ஆனந்தகுமார் லாரியின் அடியில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திேலயே பரிதாபமாக இறந்தார்.

சிறுவன் படுகாயம்

படுகாயமடைந்த ராஜேந்திரனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே உடையாளிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆனந்தகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மலையரசன், லாரி டிரைவர் கொப்பம்பட்டியை சேர்ந்த முருகானந்தம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்