மத்திகிரி:-
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிக்கொண்ட விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
தனியார் நிறுவன ஊழியர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஆவலப்பள்ளியை சேர்ந்த லட்சுமணன் மகன் லிதேஷ் (வயது 19). தனியார் நிறுவன ஊழியர்.
இவர் நேற்று முன்தினம் மோட்டார்சைக்கிளில் ஓசூர்- கெலமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற லாரி திடீரென்று பிரேக் பிடித்து நின்றது. பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் லாரி மீது மோதியது.
பலி
இதில் தூக்கி வீசப்பட்ட லிதேஷ் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த மத்திகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
விபத்தில் பலியான லிதேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.