மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; 2 தொழிலாளிகள் பலி

சேத்தியாத்தோப்பு அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 தொழிலாளி கள் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2023-02-13 18:45 GMT

சேத்தியாத்தோப்பு:

சேத்தியாத்தோப்பு அருகே ஆயிப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் அய்யப்பன் என்கிற விஜயகுமார் (வயது 27). அதே ஊரைச் சேர்ந்தவர் இவரது நண்பர் ராஜ்குமார் (29). கூலி தொழிலாளர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் ஆயிப்பேட்டையில் இருந்து சேத்தியாத்தோப்பு நோக்கி புறப்பட்டனர். கிளியனூர் பாலம் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த விஜயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ராஜ்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் ஒரத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் நண்பர்கள் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்