கல்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; வாலிபர் பலி

கல்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் வாலிபர் பலியானார்.

Update: 2022-08-23 12:42 GMT

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வயலூர் காரத்திட்டு பகுதியை சேர்ந்தவர் நித்தியானந்தம் (வயது 28). கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வருகிறார். இவர் வேலை காரணமாக கல்பாக்கம் அடுத்த காத்தான் கடை பகுதியில் உள்ள சாலையில் வளைவில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக நித்தியானந்தம் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த மணல் லாரி மோதியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கூவத்தூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே உள்ள கூவத்தூரில் இருந்து மதுராந்தகம் வரும் சாலையில் வாலோடை என்ற இடத்தில் கல்குவாரிக்கு ஜல்லி ஏற்றி வந்த லாரி ஒன்று எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில் வாயலூர் கிராமத்தை சேர்ந்த நித்தியானந்தம் (33) என்பவர் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி பலியானார். இந்த விபத்து குறித்து அணைக்கட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்