அரசு பஸ் மீது லாரி மோதல்

மார்த்தாண்டத்தில் அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 10 பேர் காயமடைந்தனர்.

Update: 2022-12-05 18:45 GMT

குழித்துறை:

மார்த்தாண்டத்தில் அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 10 பேர் காயமடைந்தனர்.

மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் பயணிகளுடன் நாகர்கோவில் நோக்கி புறப்பட்டது. அந்த பஸ் மார்த்தாண்டம் சந்திப்பில் மேம்பாலம் வழியாக சென்று கொண்டு இருந்தது. அப்போது நாகர்கோவிலில் இருந்து குழித்துறை நோக்கி மணல் ஏற்றி வந்த லாரி, அரசு பஸ்சின் பக்கவாட்டில் பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. உடனே பஸ்சில் இருந்த பயணிகள் அலறினார்கள்.

இதில் பஸ்சில் பயணம் செய்த 10 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. உடனே அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்திற்குள்ளான பஸ்சையும், லாரியையும் அப்புறப்படுத்தினர். இந்த விபத்தினால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்