அரசு பஸ் மீது லாரி மோதல்

அரசு பஸ் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-11-11 18:45 GMT

குன்னூர், 

கோவையில் இருந்து பால் ஏற்றிக்கொண்டு லாரி ஊட்டியை நோக்கி வந்தது. லாரியை கோவையை சேர்ந்த ராஜேஸ் (வயது 36) என்பவர் ஓட்டி வந்தார். ஊட்டி, குன்னூர் பகுதியில் பால் பாக்கெட்டுகளை இறக்கி விட்டு, மீண்டும் கோவையை நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி அருகே சென்ற போது, ஊட்டிக்கு வந்த அரசு பஸ் மீது லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் லாரியின் முன்பக்கம் சேதமடைந்தது. மேலும் டிரைவர் ராஜேசின் கால் இடிபாட்டில் சிக்கியது. தகவல் அறிந்த குன்னூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயம் அடைந்த ராஜேசை மீட்டு சிகிச்சைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்