சுப்பிரமணிய சாமி கோவிலில் திருவீதி உலா
சோளிங்கர் சுப்பிரமணிய சாமி கோவிலில் திருவீதி உலா நடந்தது.
சோளிங்கரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சாமி கோவிலில் கந்தசஷ்டி பத்து நாள் உற்சவம் நடைபெற்று வருகிறது. 7-வது நாள் அன்று சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட யானை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி தெய்வானை எழுந்தருளி மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அப்போது ஒவ்வொரு வீடுகளிலும் கற்பூர ஆரத்தி காண்பித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.