சாமி திருவீதி உலா

கிருஷ்ணகிரியில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சாமி திருவீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-01-03 18:45 GMT

கிருஷ்ணகிரியில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சாமி திருவீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவீதி உலா

வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. வைகுண்ட ஏகாதசி முடிந்து, கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நாராயண சாமி கோவிலில், நேற்று முன்தினம் இரவு முழுவதும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை ஏகாதசி நிறைவு விழாவையொட்டி கருட சேவை வாகனத்தில் மலையப்ப சீனிவாச பெருமாள் சாமி திருவீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா கோஷங்களை எழுப்பி சாமியை வழிபட்டனர்.

நரசிம்மசாமி கோவில்

அதேபோல் கிருஷ்ணகிரி பழையபேட்டை நரசிம்ம சாமி கோவிலில் இருந்து சாமி திருவீதி உலா வந்தது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த வீதி உலா பழையபேட்டை மகராஜகடை சாலை, நேதாஜி சாலை, காந்தி சாலை, டி.பி. சாலை வழியாக கோவிலை சென்றடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்