ஆட்டோவில் கடத்த முயன்ற 420 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்

குளச்சலில் ஆட்டோவில் கடத்த முயன்ற 420 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-01-21 18:45 GMT

குளச்சல்:

குளச்சலில் ஆட்டோவில் கடத்த முயன்ற 420 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.

கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் சுனில் குமார் தலைமையிலான அலுவலக பணியாளர்கள் நேற்று நள்ளிரவு குளச்சல் பகுதியில் தீவிர ரோந்து சென்றனர். லியோன் நகர் சுனாமி காலனியில் செல்லும்போது ஒரு பயணிகள் ஆட்டோவில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 12 கேன்களில் சுமார் 420 லிட்டர் மானிய விலை மண்எண்ணை பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இந்த வெள்ளை நிற மண்எண்ணெய் மீனவர்களின் படகுகளுக்கு பயன்படுத்துவதற்கு அரசு மானிய விலையில் மீன் வளத்துறை மூலமாக வழங்கப்படுவதாகும். உடனே அதிகாரிகள் வாகனத்துடன் மண்எண்ெணயை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அப்பகுதியில் மறைத்து வைத்திருந்த 100 லிட்டர் வெள்ளை நிற மண்எண்ணையையும் பறிமுதல் செய்யப்பட்டது. இது டீசலுக்கு அனுமதிக்கப்பட்ட லாரியின் எரிபொருளில் கலப்படம் செய்வதற்கு பதுக்கி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உடனே அதிகாரிகள் குளச்சல் போலீசார் உதவியுடன் லாரி மற்றும் ஆட்டோவையும் பறிமுதல் செய்து குளச்சல் போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். பறிமுதல் செய்யப்பட்ட மண்எண்ணெய் குளச்சல் அரசு கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்