திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இன்று நெல்லையுடன் நிறுத்தம்

திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இன்று நெல்லையுடன் நிறுத்தப்படுகிறது

Update: 2023-02-20 20:20 GMT


திருவனந்தபுரம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட செங்குளம்-நாங்குநேரி ரெயில் பாதையில் தண்டவாள பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இந்த பணிகளுக்காக மதுரை வழியாக இயக்கப்படும் திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.22627) இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் மட்டும் நெல்லை வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில், திருவனந்தபுரம்-திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.22628) இன்று ஒருநாள் மட்டும் நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு திருச்சிக்கு புறப்பட்டு வரும்.

Tags:    

மேலும் செய்திகள்