திருச்சி: வீட்டில் கொள்ளையடிக்க ஆயத்தமாக இருந்த கும்பல் கைது
திருச்சி மாவட்டம் சமயபுத்தில், வீட்டில் கொள்ளையடிக்க கையில் ஆயுதங்களுடன் ஆயத்தமாக இருந்த 4பேர் கொண்ட கும்பலை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
திருச்சி,
திருச்சி மாவட்டம் சமயபுத்தில், வீட்டில் கொள்ளையடிக்க கையில் ஆயுதங்களுடன் ஆயத்தமாக இருந்த 4பேர் கொண்ட கும்பலை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் சுற்றுவட்டார பகுதியில் போலீசார் ரோந்துப் பணயில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்தின் பேரில் நின்றிருந்த 4 பேரை சோதனை செய்தனர். அப்போது, இரும்பு கம்பி, திருப்புலி, கையுறை உள்ளிட்டவற்றை வைத்திருந்ததால், அவர்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரித்ததில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட இருந்தது தெரியவந்தது.
மேலும் விசாரணையில், 5வது நபரான நாமக்கலைச் சேர்ந்த கனகராஜை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 108 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.