திருச்சிமாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

திருச்சிமாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது.

Update: 2022-09-10 18:55 GMT

திருச்சி மாவட்டத்தில் 36-வது சுற்றாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி திருச்சி மாநகரில் 600 இடங்கள், புறநகரில் 1,220 இடங்கள் மற்றும் 11 அரசு ஆஸ்பத்திரிகள் என்று மாவட்டம் முழுவதும் 1,831 இடங்களில் இந்த முகாம் நடைபெற உள்ளது. முழுதவணை தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே கொரோனாவில் இருந்து தப்பிக்க முடியும். எனவே இந்த முகாமில் கொரோனா தடுப்பூசி முதல் தவணை செலுத்தாதவர்கள் மற்றும் 2-வது தவணை செலுத்த வேண்டியவர்கள் மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும். இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்