இலங்கை முள்ளிவாய்க்காலில் இறந்த தமிழீழ மக்களுக்கு அஞ்சலி

தூத்துக்குடியில் இலங்கை முள்ளிவாய்க்காலில் இறந்த தமிழீழ மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2023-05-18 18:45 GMT

தூத்துக்குடி சிவந்தாகுளத்தில் முள்ளிவாய்க்காலல் இறந்த போராளிகள், பொதுமக்களுக்கு ஆதித்தமிழ்க்குடி இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வீரவணக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஏர் உழவன் அனைத்து விவசாயிகள் சங்கம் தலைவர் மு.ரமேஷ் தலைமைத் தாங்கினார். தமிழ்க மீனவ மக்கள் கட்சித் தலைவர் அ.கோல்டன்பரதர் முன்னிலை வகித்தார். தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சித் தலைவர் அ.வியனரசு இனப்படுகொலை ஆவணபடத்துக்கு மெழுகுவர்த்தி ஏற்றியும் மலர்தூவியுயும் வீரவணக்கம் செலுத்தினார்.

நிகழ்ச்சியில் தமிழக மீனவர் மக்கள் கட்சி மாநில தலைவர் ராஜசேகர், தூத்துக்குடி மாவட்ட தலைவர் செந்தில், மாவட்ட பிரதிநிதி ஆனந்த், ஏர் உழவன் அனைத்து விவசாயிகள் சங்க பொறுப்பாளர்கள் அருண்குமார், சிவனணைந்தபெருமாள், மாநில இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் ம.இசக்கி பாண்டியன், இளைஞர் அணி செயலாளர் இம்மானுவேல், தெற்கு மாவட்ட தலைவர் திவாகர், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் கார்த்திக் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்