வாஞ்சிநாதன் உருவப்படத்துக்கு மரியாதை
வாஞ்சிநாதன் நினைவு தினத்தையொட்டி நெல்லையில் அவரது உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
வாஞ்சிநாதன் நினைவு தினத்தையொட்டி, அவரது சொந்த ஊரான செங்கோட்டையில் ஜோதி ஓட்டம் தொடங்கியது. நெல்லை வந்தடைந்த ஜோதிக்கு சந்திப்பு பாரதியார் சிலை முன்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. மீண்டும் ஜோதி ஓட்டம் தொடங்கி வாஞ்சி மணியாச்சி நோக்கி புறப்பட்டு சென்றது. பாளையங்கோட்டை வ.உ.சி. திடல் வளாகத்தில் உள்ள வ.உ.சி. சிலை முன்பு வாஞ்சிநாதன் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அங்கு தமிழ்நாடு சைவ வேளாளர் முன்னேற்ற கழக தலைவர் பந்தல் ராஜா தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதில் மாநில துணை பொதுச்செயலாளர் தேவி ஆறுமுகம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி வ.உ.சி. சந்த்ரு, ஈஸ்வரன், முத்துராஜ், மாரி, கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.