இந்திய கம்யூனிஸ்டு நிர்வாகி உருவப்படத்துக்கு மரியாதை

செங்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு நிர்வாகி உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2022-10-26 18:45 GMT

செங்கோட்டை:

செங்கோட்டையில் தாலுகா அலுவலகம் முன்பு சுதந்திர போராட்ட தியாகியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில செயலாளருமான மாணிக்கம் நூற்றாண்டு நிறைவு நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் ஆழ்வார் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் நகர செயலாளர் சுப்பிரமணியன், விவசாய சங்க செயலாளர் சுந்தர், தாலுகா குழு உறுப்பினர் போஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்