பழங்குடி மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பழங்குடி மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-12-05 17:36 GMT

செங்கம்

பழங்குடி மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

செங்கம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் செங்கம் அருகே உள்ள பன்டிரேவ், ஊர்கவுண்டனூர் பகுதி மலைவாழ் மக்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தங்கள் மலை கிராம பகுதிகளுக்கு சேவையை சேவையை நீட்டிக்க வேண்டும், மலை கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ள வேண்டும், மாணவர்களுக்கு மதியம் தரமான உணவு வழங்கிட வேண்டும், மண் சாலைகளை தார்சாலையாக மாற்றி அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் தங்கராஜ், துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் முருகன், மகாவிஷ்ணு, தங்கமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் சர்தார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்