சூறாவளி காற்றில் மரங்கள் வேரோடு சாய்ந்தன

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றில் மரங்கள் வேரோடு சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-06-01 17:43 GMT

ஆம்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று திடீரென சூறைக்காற்று வீசியது. இதனால் ஆம்பூரில் இருந்து உமராபாத் செல்லும் வழியில் உள்ள பந்தரப்பல்லி கிராமத்தில் சாலையின் ஓரம் இருந்த 2 மரம் வேரோடு சாய்ந்து சாலையின் நடுவே விழுந்தது. அருகே இருந்த மின் கம்பங்கள் மீது மரம் விழுந்ததில் மின் கம்பங்கள், மின்சார ஓயர்கள் அருந்து விழுந்தது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

இது குறித்து அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெடுஞ்சாலை துறையினர், மின்சார துறையினர், வருவாய் துறை அதிகாரிகள் மரத்தை வெட்டி பொக்லைன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் மின்சாரத் துறையினர் மின் கம்பங்களை புதுப்பித்து மின் இணைப்பை வழங்கும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்