சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட்ட மரங்கள்

Update: 2023-04-06 15:53 GMT


பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. கோவை - திருச்சி தேசிய நெடுஞசாலை எண் 81-ல் தினமும் 50 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது. இந்த நிலையில் காரணம்பேட்டை முதல் பல்லடம் அண்ணாநகர் வரை 9 கி.மீட்டர் துாரத்திற்கு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது.

 சாலை விரிவாக்கப் பணிக்காக பனப்பாளையம், கொசவம்பாளையம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்த பழமை வாய்ந்த மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள் வெட்டப்பட்டதா அல்லது வேறு எவராவது அனுமதி பெறாமல் வெட்டினார்களா ? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். மேலும் சாலையோரம் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்