பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா
நெமிலியில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
நெமிலி
நெமிலி பஸ் நிலையத்தில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு கலந்துகொண்டு பெரியாரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின்னர் கீழ்வீதி பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழாவை தொடங்கி வைத்தார்.
இதில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தலைவர் திலீபன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர துணை செயலாளர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நெமிலி பஸ் நிலையத்தில் மத்திய, மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நடைபெற்ற பெரியார் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பெரியார் சிலைக்கு ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், ரவீந்திரன் ஆகியோர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
இதில் அவைத்தலைவர் நரசிம்மன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் மார்க்கண்டேயன், ஒன்றிய துணை செயலாளர்கள் சம்பத், முகமத் அப்துல் ரகுமான், சுற்றுச்சூழல் அணி ஹரிஷங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பெரும்புலிப்பாக்கம் சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு ஒன்றிய செயலாளர் ஓச்சேரி பாலாஜி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் அவைத்தலைவர் லட்சாதிபதி, துணை செயலாளர்கள் வேதாந்தம், பூரி அன்பரசு, மாவட்ட பிரதிநிதிகள் ஜாகீர் உசேன், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.