பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா

பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

Update: 2022-11-28 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யத்தில் வனத்துறையின் சார்பில் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை அரசு உயர்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. விழாவில் கோடியக்கரை வனசரக அலுவலர் அயூப்கான் கலந்து கொண்டு மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வன், தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன், ஆசிரியர் செல்லப்பா, நகரமன்ற உறுப்பினர்கள் இமயா முருகையன், இளவரசி நடராஜன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிவமுருகன், மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 600 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த திட்டத்தின் மூலம் புஷ்பவனம், பெரிய குத்தகை கடற்கரை பகுதியில் 10 ஆயிரம் சவுக்கு மரக்கன்றுகளை நட உள்ளதாக வனசரக அலுவலர் அயூப்கான் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்