பட்டிவீரன்பட்டி பகுதியில் மா மரக்கன்று நடும் பணி தீவிரம்
பட்டிவீரன்பட்டி பகுதியில் மா மரக்கன்று நடும் பணி தீவிரம் நடைபெற்று வருகிறது.
பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, நெல்லூர், மருதாநதி அணை பகுதிகள் மற்றும் சித்தையன்கோட்டை, தேவரப்பன்பட்டி, தாண்டிக்குடி மலை அடிவார பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மா விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு கல்லாமை, காசா, செந்தூரம், இமாம்பஸ், காளைபாடி, கருங்குரங்கு போன்ற பல்வேறு ரக மாங்காய்கள் கொண்ட மாமரங்கள் அதிக அளவில் உள்ளன.
இந்தநிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் விவசாயிகள் தங்களது நிலங்களில் மா மரக்கன்றுகளை நடும் பணியை தொடங்கியுள்ளனர். இதையொட்டி பட்டிவீரன்பட்டி பகுதியில் 6 மாதம் முதல் 1 ஆண்டு வரை ஒட்டுக்கட்டுதல் மூலமாக மாமரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு, தற்போது அவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மரக்கன்றுகள் ரகத்தை பொறுத்து கன்று ஒன்று ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.