வால்பாறையில் தபால் அலுவலகம் மீது மரம் முறிந்து விழுந்தது-ஊழியர் காயம்
வால்பாறையில் தபால் அலுவலகம் மீது மரம் முறிந்து விழுந்தது-ஊழியர் காயம்
வால்பாறை
வால்பாறை பகுதியில் குடியிருப்புடன் கூடிய கிளை தபால் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தபால் நிலையத்தில் தபால் நிலைய ஊழியராக பணியாற்றி வருபவர் உண்ணிகிருஷ்ணன் (வயது 55). இவர் நேற்று மதியம் தபால் நிலையத்தில் பணியிலிருக்கும் போது சம்மந்தப்பட்ட எஸ்டேட் நிர்வாகத்தினர் மரக்கிளைகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வெட்டப்பட்ட மரக்கிளை முறிந்து தபால் நிலையத்தின் மீது விழுந்துள்ளது. அதில் சிறிய கிளை ஒன்று பணியில் இருந்த உண்ணிகிருஷ்ணன் தலை மீது விழுந்தது. இதனால் அவர் காயம் அடைந்தார். இதையடுத்து அவர் அந்தப்பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கக அனுமதிக்கப்பட்டார்.