'தினத்தந்தி' செய்தி எதிரொலி: முறிந்து விழும் நிலையில் இருந்த மரம் அகற்றம்

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: முறிந்து விழும் நிலையில் இருந்த மரம் அகற்றம்

Update: 2022-12-02 21:34 GMT

சென்னிமலை

சென்னிமலையில் ஈங்கூர் ரோட்டில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு பெரிய வாதானி மரம் ஒன்று இருந்தது. இந்த மரத்தின் அடிப்பகுதியில் ஓட்டை விழுந்ததால் மரம் வலுவிழந்து காணப்பட்டது. வாகன போக்குவரத்து அதிகமாக உள்ள இந்த ரோட்டில் மரம் முறிந்து விழுந்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். எனவே மரத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும் இது பற்றிய செய்தி நேற்று முன்தினம் தினத்தந்தியில் வெளிவந்தது.

இந்தநிலையில், நெடுஞ்சாலை துறையினர் நேற்று அந்த மரத்தை வெட்டி அகற்றினார்கள். மேலும் அருகில் இருந்த மற்றொரு மரத்தின் கிளையையும் பாதுகாப்பு கருதி வெட்டி அகற்றினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்