கோவை வெள்ளியங்காடு பகுதியில் வாயில் காயத்துடன் சுற்றி திரியும் காட்டுயானைக்கு சிகிச்சை

வாயில் காயத்துடன் சுற்றி திரியும் காட்டு யானைக்கு கால்நடை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்துவருகின்றனர்.

Update: 2023-03-17 08:23 GMT

கோவை,

கோவை வெள்ளியங்காடு பகுதியில் 2 நாட்களாக காட்டு யானை ஒன்று விளைநிலத்தில் நடமாடி வருவதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

யானையை விரட்ட வந்த வனத்துறையினருக்கு யானைக்கு வாயில் காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. காட்டு யானையின் நடு நாக்கில் வெட்டு காயம் இருப்பதால் கீழ் நாக்கு செயலிழந்துள்ளதால் சாப்பிடும் உணவை உள்ளே தள்ள முடியாத காரணத்தினால் காட்டு யானை அவதியடைந்துள்ளது.

இதையடுத்து வாயில் காயத்துடன் சுற்றி திரியும் காட்டு யானைக்கு கால்நடை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக்க முடிவு செய்து யானைக்கு மயக்க மருந்து கொடுத்துள்ளனர். யானைக்கு சிகிச்சை அளித்து வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியில் வனத்துறையினருடன் சேர்ந்த பொதுமக்களும் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

இதனிடையே, யானையின் நடு நாக்கில் வெட்டு காயம் ஏற்பட நாட்டு வெடி காரணமா? அல்லது சண்டையின் போது தந்தம் கிழித்து யானைக்கு காயம் ஏற்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்