சேலம் கோட்டத்தில், கடந்த மாதத்தில் ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம்; 16,089 பேருக்கு ரூ1¼ கோடி அபராதம்

சேலம் கோட்டத்தில், கடந்த மாதத்தில் ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 16,089 பேருக்கு ரூ1¼ கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2022-12-15 20:00 GMT

சூரமங்கலம்,

ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வதை தடுக்கும் வகையில் தீவிர சோதனை மேற்கொள்ள, சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் கவுதம் சீனிவாஸ் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் டிக்கெட் பரிசோதகர்கள், ரெயில்வே பாதுகாப்பு படையினர் அடங்கிய குழுவினர் ரெயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில், எக்ஸ்பிரஸ், பயணிகள் ரெயில்களில் டிக்கெட் பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் கடந்த மாதம் நடத்திய சோதனையில், டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்கள், முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுத்து முன் பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்தல், அனுமதிக்கப்பட்ட லக்கேஜை விட அதிகமாக கொண்டு சென்றது உள்பட உள்பட 16 ஆயிரத்து 89 பேர் பிடிபட்டனர். இவர்கள் மீது ரெயில்வே சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு 1.25 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது.

இது குறித்து சேலம் ரெயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் கூறும் போது, 'ரெயிலில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வது தண்டனைக்குரியது ஆகும், எனவே பயணச்சீட்டு இல்லாமல் ரெயிலில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்' என்றார்.Penalty அபராதம்

Tags:    

மேலும் செய்திகள்