போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-21 18:45 GMT

நாகை அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பணிமனை தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். மத்திய சங்க செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் தங்கமணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை தனியார் மூலம் நிரப்பக்கூடாது. வாரவிடுப்பு, வாரஓய்வு, ஒப்பந்தப்படி ஊதியம் ஆகியவை வழங்க வேண்டும்.பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். டிரைவர், கண்டக்டர், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக ஊழியர்கள், டிக்கெட் பரிசோதகர்கள் உள்ளிட்ட பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஓய்வு பெற்ற நல அமைப்பு செயலாளர் ஜீவானந்தம், சி.ஐ.டி.யூ. மாவட்டக்குழு உறுப்பினர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்