போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-30 19:38 GMT

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் பெரம்பலூர் பணிமனை முன்பு சி.ஐ.டி.யு. அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சங்கம், அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் நேற்று மதியம் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சங்கத்தின் பெரம்பலூர் கிளை செயலாளர் சிங்கராயர் தலைமை தாங்கினார். அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பெரம்பலூர் கிளை செயலாளர் தங்கராசு முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களை வெறுங்கையுடன் வீட்டிற்கு அனுப்பக்கூடாது.

ஓய்வுகால பலன்களை உடனடியாக வழங்கிட வேண்டும். தொழிலாளர்கள், ஓய்வு பெற்றோர் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்