போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் (சி.ஐ.டி.யூ.) சார்பில், பழனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் (சி.ஐ.டி.யூ.) சார்பில், பழனியில் ஆர்ப்பாட்டம் மற்றும் கோரிக்கை விளக்க கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கிளை தலைவர் பாஸ்கர் பொன்ராஜ் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். ஓய்வுபெற்றோர் நல அமைப்பு நிர்வாகி வெள்ளைசாமி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, ஊதிய உயர்வு, ஓய்வூதியதாரர்களுக்கு பஞ்சப்படி உயர்வு, கழகங்களுக்கு கூடுதல் நிதி, புதிய பஸ்கள் இயக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.