போக்குவரத்து, ஆயுதப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

மாவட்டத்தில் போக்குவரத்து பிரிவு மற்றும் ஆயுதப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-05-15 18:47 GMT


மாவட்டத்தில் போக்குவரத்து பிரிவு மற்றும் ஆயுதப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தரவிட்டுள்ளார்.

பணியிட மாற்றம்

அதன் விவரம் வருமாறு:-

விருதுநகர் போக்குவரத்து பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ், ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். சிவகாசி போக்குவரத்து பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சிவகாசி ஆயுதப்படை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

திருத்தங்கல் போக்குவரத்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கணேசன், வத்திராயிருப்பு ஆயுதப்படை பிரிவுக்கும், சாத்தூர் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் விருமாண்டி மற்றும் சாத்தூர் நகர் பகுதியில் பணியாற்றும் மங்களதுரை ஆகியோர் விருதுநகர் ஆயுதப்படை போலீஸ்பிரிவுக்கும் பணியிடமாற்றம் பெற்றுள்ளனர்.

சிவகாசி, சாத்தூர்

விருதுநகர் ஆயுதப்படை போலீஸ் பிரிவில் பணியாற்றும் மணிகண்டன், விருதுநகர் போக்குவரத்து போலீஸ்பிரிவுக்கும், முத்துக்குமார் சிவகாசி போக்குவரத்து போலீஸ் பிரிவிற்கும் பணியிட மாற்றம் பெற்றுள்ளனர். விருதுநகர் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் ரவி, திருத்தங்கல் போக்குவரத்து பிரிவுக்கும், வத்திராயிருப்பு சிறப்பு ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் கார்த்திகேயன் ராஜபாளையம் போக்குவரத்து போலீஸ் பிரிவுக்கும், சிவகாசி ஆயுதப்படையில் பணியாற்றும் தங்கம், சாத்தூர் நகர் போக்குவரத்து போலீஸ் பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்துள்ளனர்.

விருதுநகர் ஆயுதப்படை போலீஸ் பிரிவில் பணியாற்றும் ஆனந்த், சாத்தூர் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து போலீஸ் பிரிவுக்கும் பணியிட மாற்றம் பெற்றுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்