வீட்டுமனைப்பட்டா கேட்டு தாலுகா அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை

வீட்டுமனைப்பட்டா கேட்டு தாலுகா அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகையிட்டனர்.

Update: 2023-05-20 22:42 GMT

எடப்பாடி:

எடப்பாடி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இவர்கள் நேற்று எடப்பாடி தாலுகா அலுவலகம் முன்பு கரினா தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திருநங்கைகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கி உள்ளதாகவும், மேலும் சுய தொழில் செய்ய வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்டவை வழங்கி உள்ளதாகவும், எனவே தங்களுக்கும் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். தொடர்ந்து துணை தாசில்தார் ராஜமாணிக்கத்திடம் கோரிக்கை மனுவை வழங்கினர். இந்த திடீர் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் நடத்தியவர்களிடம், போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் செய்திகள்