திருநங்கைகள் நடத்திய உணவு திருவிழா
பொள்ளாச்சியில் திருநங்கைகள் நடத்திய உணவு திருவிழா களைகட்டியது.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சியில் திருநங்கைகள் சார்பில், உணவு திருவிழா நடைபெற்றது. இதில் திருநங்கைகள் தயாரித்த சைவ மற்றும் அசைவ உணவுகள் என 20 வகையான உணவு வகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. இதில் சிறப்பாக உணவு தயாரித்த திருநங்கைகளுக்கு பொள்ளாச்சி சப்-கலெக்டர் பிரியங்கா பாராட்டு சான்றிதழ், கேடயம் வழங்கினார். பின்னர் திருநங்கைகள் சமைத்த உணவுகளை சப்-கலெக்டர் பிரியங்கா, பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஆகியோர் சாப்பிட்டு பார்த்தனர். இதுகுறித்து திருநங்கை கல்கி சுப்பிரமணியம் கூறும்போது, கோவை மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளை ஊக்குவிக்க, திருநங்கைகள் உணவு திருவிழாவை பெரிய அளவில் சமூக நலத்துறை உதவியுடன் நடத்த வேண்டும். திருநங்கை சமையல் கலைஞர்கள் தொழில் முனைவோராக வாழ்க்கையில் முன்னேற அரசு உதவி செய்ய வேண்டும் என்றார்.