மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

Update: 2022-06-27 17:11 GMT

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேல்மலையனூர் தாலுகா அவலூர்பேட்டை, மலையனூர், தாயனூர், தேப்பரம்பட்டு, கங்கபுரம், மேல்வைலாமூர், பள்ளவைலாமூர் ஆகிய கிராமங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் அமீர்ஜான் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சவுரிராஜன், நிர்வாகக்குழு உறுப்பினர் கோவிந்தராஜ், துணை அமைப்பாளர் திவ்யபிராங்ளின், உழைக்கும் பெண்கள் அமைப்பின் மாவட்ட செயலாளர் வளர்மதி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் நிர்வாகிகள் ராஜா, பிரபு, அசதுல்லா ஷெரீப், சஞ்சய், முனியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்