ரூ.1.68 கோடியில் புதிய டிரான்ஸ்பார்மர்
வெள்ளிச்சந்தை துணை மின் நிலையத்தில் ரூ.1.68 கோடியில் புதிய டிரான்ஸ்பார்மரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
பாலக்கோடு:
வெள்ளிச்சந்தை துணை மின் நிலையத்தில் ரூ.1.68 கோடியில் புதிய டிரான்ஸ்பார்மரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
புதிய டிரான்ஸ்பார்மர்
பாலக்கோடு அருகே உள்ள வெள்ளிச்சந்தை துணை மின் நிலையத்தில் 10 மெகாவாட்டில் இருந்து 16 மெகாவாட்டாக திறன் உயர்த்துதல் திட்டத்தை ரூ.1. கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து வெள்ளிச்சந்தை துணை மின் நிலையத்தில் நடந்த விழாவில் செந்தில்குமார் எம்.பி. ரிப்பன் வெட்டி ஸ்விட்ச் ஆன் செய்து புதிய டிரான்ஸ்பார்மரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மின்வாரிய செயற்பொறியாளர்கள் வனிதா, சரவணன், உதவி செயற்பொறியாளர்கள் முனிராஜ், அழகுமணி, அருண்பிரசாத், ரமேஷ், மோகன் மற்றும் பாலக்கோடு கோட்டத்தை சேர்ந்த உதவி பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மின் நுகர்வோர்
இந்த புதிய டிரான்ஸ்பார்மர் மூலம் கணவனஅள்ளி, மாரண்டஅள்ளி, கருக்கனஅள்ளி, நல்லூர், பெல்லுஅள்ளி, சீரியம்பட்டி, கரகூர், பொப்பிடி, அத்திமுட்லு, பஞ்சப்பள்ளி, பெரியானூர், ஆல்மாரப்பட்டி, குட்லானஅள்ளி, கும்மனூர், நமாண்டஅள்ளி, பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 296 மின் நுகர்வோர் பயன் பெறுவார்கள் என்று தர்மபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் செல்வகுமார் தெரிவித்தார்.