விழுப்புரம் மாவட்டத்தில்6 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

விழுப்புரம் மாவட்டத்தில் 6 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

Update: 2023-01-12 18:45 GMT


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த துரைராஜ் விக்கிரவாண்டி போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கும், திண்டிவனம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா செஞ்சி போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கும், விக்கிரவாண்டி போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமாரராஜா, விழுப்புரம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஆகியோர் விழுப்புரம் ஆயுதப்படைக்கும், அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன் செஞ்சி போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கும், தேவநாதன் திண்டிவனம் போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பிறப்பித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்