ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் இடமாற்றம்
சேலம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து வரும் அலுவலர்களுக்கு பதவி உயர்வும், இடமாறுதல்களும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி உதவியாளர் நிலையில் இருந்த 3 பேருக்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 7 பேரும், பணி பார்வையாளர்கள் 22 பேரும், இளநிலை உதவியாளர்கள் 3 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை கலெக்டர் கார்மேகம் பிறப்பித்துள்ளார்.