வருவாய் கோட்டாட்சியர்கள் இடமாற்றம்

வருவாய் கோட்டாட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

Update: 2023-06-04 20:41 GMT

திருச்சி மாவட்டம் லால்குடி வருவாய் கோட்டாட்சியராக இருந்த வைத்தியநாதன் திருச்சி மாநகராட்சி மண்டலம்-1 உதவி ஆணையராகவும், திருச்சி வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம் திருச்சி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலராகவும், முசிறி வருவாய் கோட்டாட்சியர் மாதவன் நாமக்கல் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும் (பொது), இந்தியன் எண்ணெய் கழக நிறுவனம் திருச்சி ஒருங்கிணைப்பு அலுவலர் கமலக்கண்ணன் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியராகவும், திருச்சி மாநகராட்சி மண்டலம்-2 உதவி ஆணையர் அக்பர்அலி தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியராகவும், கரூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தட்சிணாமூர்த்தி ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் சென்னை கன்னியாகுமரி திட்ட மறுபகிர்மான அலுவலர் ராஜன் முசிறி வருவாய் கோட்டாட்சியராகவும், நாமக்கல் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணியன் லால்குடி வருவாய் கோட்டாட்சியராகவும், மதுரை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பார்த்திபன் திருச்சி வருவாய் கோட்டாட்சியராகவும், ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மீனாட்சி திருச்சி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை அரசு கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜயந்த் பிறப்பித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்