வருவாய் அதிகாரிகள் இடமாற்றம்
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களின் வருவாய் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களின் வருவாய் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
தென்காசி- தூத்துக்குடி
தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ஜெய்னுலாப்தீன், சென்னை தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவன பொது மேலாளராக (இயக்கம்) இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக நாகப்பட்டினம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் கு.பத்மாவதி தென்காசி மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் சு.கண்ணபிரான், சென்னை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக வர்த்தக பொது மேலாளராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக சென்னை அரசு கேபிள் டி.வி. பொது மேலாளர் ச.அஜய் சீனிவாசன் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
நெல்லை
நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் செ.ஜெயஸ்ரீ, சென்னை தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவன பொது மேலாளராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
அவருக்கு பதிலாக சென்னை நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக பொது மேலாளர் டாக்டர் ப.மு.செந்தில்குமார் நெல்லை மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு பிறப்பித்து உள்ளார்.