போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
விருதுநகர் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தரவிட்டுள்ளார்.
சிவகாசி
அதன் விவரம் வருமாறு:-
ஆமத்தூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் கார்த்திக், விருதுநகர் கிழக்கு போலீஸ் நிலையத்திற்கும், விருதுநகர் மேற்கில் பணியாற்றும் சிவனேசன் சூலக்கரைக்கும், சிவகாசி டவுன் போலீசில் பணியாற்றும் பாலமுரளி கிருஷ்ணன் ஆமத்தூருக்கும், ஆவியூரில் பணியாற்றும் ஜெயலட்சுமி அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், மாரநேரியில் பணியாற்றும் செண்பகவேலன் சாத்தூர் மதுவிலக்கு பிரிவிற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கட்டனூர் போலீஸ் கட்டுப்பாட்டுஅறையில் பணியாற்றும் சரவணராஜ் கட்டனூர் போலீஸ் நிலையத்திற்கும், சாத்தூர் மதுவிலக்கு பிரிவில் பணியாற்றும் பாக்கியராஜ் சிவகாசி டவுனுக்கும், சாத்தூர் மதுவிலக்கு பிரிவில் பணியாற்றும் ராஜ்குமார் இருக்கன்குடிக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் மதுவிலக்கு பிரிவில் பணியாற்றும் பாண்டி லட்சுமி நத்தம்பட்டிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ராஜபாளையம்
சிவகாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் அழகு ஜோதி ஸ்ரீவில்லிபுத்தூர் மதுவிலக்கு பிரிவிற்கும், சிவகாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் ஜோதி மல்லி போலீஸ் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ராஜபாளையம் மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் பூரண தீபா ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்திற்கும், அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் புவனேஸ்வரி ஆவியூருக்கும், சாத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் ரேவதி அப்பையநாயக்கன்பட்டிக்கும், ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் மூவேந்தர் தளவாய்புரத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணன் கோவிலில் பணியாற்றும் பிரியா தளவாய்புரத்திற்கும், மல்லி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் செல்லப்பாண்டி வன்னியம்பட்டிக்கும், நரிக்குடி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் ராபியம்மாள் மல்லாங்கிணறுக்கும், திருச்சுழியில் பணியாற்றும் ராமநாதன் கிருஷ்ணன் கோவிலுக்கும், அப்பையநாயக்கன்பட்டியில் பணியாற்றும் காசிராஜன் வச்சக்காரப்பட்டிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அருப்புக்கோட்டை
அதேபோல சிவகாசி கிழக்கில் பணியாற்றும் அஜித்குமார் சூலக்கரைக்கும், ஏ. முக்குளத்தில் பணியாற்றும் கமல் வீரசோழனுக்கும், மல்லாங்கிணறில் பணியாற்றும் வேல்முருகன் அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சூலக்கரையில் பணியாற்றும் கார்த்திகா விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்திற்கும், தளவாய்புரத்தில் பணியாற்றும் செல்வம் சிவகாசி கிழக்குக்கும், அங்கு பணியாற்றும் சத்தியவேந்தன் திருச்சுழிக்கும், வனிதா சிவகாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நரிக்குடி
வன்னியம்பட்டியில் பணியாற்றும் கனகராஜ் ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்திற்கும், நத்தம்பட்டியில் பணியாற்றும் நமச்சிவாயம் கூமாபட்டிக்கும், கூமாப்பட்டியில் பணியாற்றும் ஆறுமுகசாமி ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்திற்கும், கட்டனூரில் பணியாற்றும் அந்தோணி செல்வராஜ் கட்டுப்பாட்டு அறைக்கும் அருப்புக்கோட்டையில் பணியாற்றும் கொம்பையா நரிக்குடிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.