போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்

கண்காணிப்பு கேமரா பொருத்துவதாக பணம் வசூலிக்கப்பட்ட விவகாரத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2023-10-08 20:40 GMT

சேலம் அடுத்த கருப்பூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் ராஜா. இவர், கோட்டகவுண்டன்பட்டி, சாமிநாயக்கன்பட்டி பகுதிகளில் பொதுமக்களின் பங்களிப்புடன் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கு பண உதவி பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை. இதனால் பணம் வசூலித்ததில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, துணை கமிஷனர் கவுதம் கோயலுக்கு உத்தரவிட்டார். அவர் விசாரணை நடத்தி அறிக்கை அளித்துள்ளார்.

இதையடுத்து கருப்பூரில் இருந்து தற்போது கிச்சிப்பாளையத்தில் பணிபுரிந்து வரும் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாவை, மாநகர ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து கமிஷனர் விஜயகுமாரி நேற்று உத்தரவிட்டார். இந்த மோசடி குறித்து துறை ரீதியாகவும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்