7 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

நெல்லையில் 7 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

Update: 2022-07-07 19:54 GMT

நெல்லை மாநகர நில அபகரிப்பு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி சந்திப்பு குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். சிறார் உதவி பிரிவு இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி பேட்டை குற்றபிரிவுக்கும், மாநகர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தனலட்சுமி சிறார் உதவி பிரிவு இன்ஸ்பெக்டராகவும், மணிமுத்தாறு சிறப்பு பட்டாலியன் இன்ஸ்பெக்டர் சாம்சன் மாநகர சிறப்பு நுண்ணறிவு பிரிவுக்கும், பாளையங்கோட்டை சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் திருப்பதி மாநகர குற்றப்பிரிவுக்கும், ஜங்ஷன் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கும், மாநகர சிறப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முக வடிவு பாளையங்கோட்டை குற்றபிரிவு இன்ஸ்பெக்டர் ஆகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்காக உத்தரவை போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் பிறப்பித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்