கல்வித்துறை அதிகாரிகள் பணி இடமாற்றம்

கல்வித்துறை அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

Update: 2023-06-15 19:15 GMT

கோப்புப்படம்

சென்னை,

பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தொடக்கக்கல்வி இயக்கக துணை இயக்குனர் (நிர்வாகம்) இரா.பூபதி, பள்ளிக்கல்வி துணை இயக்குனராகவும் (மின் ஆளுமை), பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் ஞானகவுரி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் துணை இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக துணை இயக்குனர் அய்யண்ணன், ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குனராகவும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் துணை இயக்குனர் அருளரசு, தொடக்கக் கல்வி துணை இயக்குனராகவும், செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்