வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பணியாற்றி வரும் 6 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்விவரம் வருமாறு:-
கீழ்பென்னாத்தூர் வட்டாரத்தில் பணியாற்றி வரும் (கிராம ஊராட்சி) டி.அண்ணாதுரை திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி அலுவலகத்துக்கும் (நிர்வாகம்), அங்கு பணியாற்றி வரும் ரவிச்சந்திரன் கீழ்பென்னாத்தூருக்கும் (கிராம ஊராட்சி),
வெம்பாக்கத்தில் பணியாற்றி வரும் (வருவாய் ஊராட்சி) மயில்வாகனன் பெரணமல்லூருக்கும் (கிராம ஊராட்சி), அங்கு பணியாற்றி வரும் மோகனசுந்தரம் வெம்பாக்கத்துக்கும் (வருவாய் ஊராட்சி), ஆரணியில் பணியாற்றி வரும் (வருவாய் ஊராட்சி) விஜயலட்சுமி மேற்கு ஆரணிக்கும் (வருவாய் ஊராட்சி),
அங்கு பணியாற்றி வரும் திலகவதி ஆரணிக்கும் (வருவாய் ஊராட்சி) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல மேற்கு ஆரணியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வரும் (ஊராட்சிகள்) பாலமுருகன் பதவி உயர்வில் அங்கேயே (கிராம ஊராட்சி) வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை கலெக்டர் முருகேஷ் பிறப்பித்துள்ளார்.