5 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
வேலூர் சரகத்தில் 5 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் சரகத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கும், அங்கு பணிபுரிந்த முத்துக்குமார் வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்துக்கும், அங்கு பணிபுயும் உலகநாதன் திருப்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கும் மாற்றப்பட்டனர்.
அதேபோன்று வேலூர் சரகத்தில் காத்திருப்பு பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் பாபு ரவிச்சந்திரன் வேலூர் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்புப்பிரிவிற்கும், அங்கு பணியாற்றிய சசிக்குமார் ராணிப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவிற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி பிறப்பித்துள்ளார்.