31 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

நெல்லை சரகத்தில் 31 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2023-07-10 19:28 GMT

நெல்லை சரகத்தில் 31 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி இன்ஸ்பெக்டர் ஜான்ட்டஸ் பாபுனி நெல்லை மாவட்ட குற்ற ஆவண காப்பகத்துக்கும், நெல்லை மீராள் பானு நாங்குநேரி குற்றப்பிரிவுக்கும், காரைக்குடி தெற்கு கபீர் தாசன், தூத்துக்குடி தெர்மல் நகருக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த சோனமுத்து நெல்லை மாவட்ட நக்சலைட் தடுப்பு பிரிவுக்கும், ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் லட்சுமி பிரபா, தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆலங்குளம் அனைத்து மகளிர் சாந்தகுமாரி, நாகர்கோவில் அனைத்து மகளிருக்கும், தென்காசி தர்மராஜ் ஏர்வாடிக்கும், நெல்லை சிவகளை சிவந்திபட்டிக்கும், நெல்லை குற்ற ஆவண காப்பகம் ஆதி லட்சுமி, தென்காசி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கும், ராமநாதபுரம் ராமசந்திரன் தக்கலைக்கும், தென்காசி கவிதா, தென்காசி குற்றப்பிரிவுக்கும், தூத்துக்குடி சுந்தரி கடையநல்லூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி பச்சமால் களக்காட்டுக்கும், ரமேஷ் கண்ணன் சுரண்டைக்கும், சுரண்டை சுதந்திர தேவி மணியாச்சிக்கும், இன்னோஸ்குமார் முன்னீர்பள்ளத்துக்கும், சண்முகலட்சுமி சிவகிரிக்கும், தெர்மல் நகர் தங்கராஜ் நாகர்கோவில் மதுவிலக்கிற்கும், கன்னியாகுமரி கட்டுப்பாட்டு அறை திருநாவுக்கரசு தட்டார்மடத்துக்கும், தென்காசி மாவட்ட குற்ற ஆவண காப்பகம் சரசுவதி கரிவலம்வந்தநல்லூருக்கும், அங்கிருந்த ஹேமலதா ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிருக்கும், செங்கோட்டை ஷியாம் சுந்தர் கூடங்குளத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தென்காசி குற்றப்பிரிவு ராஜேஷ் கண்ணா செங்கோட்டைக்கும், தட்டார்மடம் பவுலோஸ் வீரவநல்லூருக்கும், சுப்பையா சுசீந்திரத்துக்கும், ஏர்வாடி ஆதம் அலி நாங்குநேரிக்கும், கூடங்குளம் ஜான் பிரிட்டோ வள்ளியூருக்கும், நாகர்கோவில் மதுவிலக்கு முத்துமணி பசுவந்தனைக்கும், சிவந்திபட்டி அன்பு பிரகாஷ், சரகத்துக்கும், ஆக்னஸ் பொன்மணி, நெல்லை மாவட்டத்துக்கும், முன்னீர்பள்ளம் தில்லை நாகராஜன், முறப்பநாடு போலீஸ் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்