சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் இடமாற்றம்

கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேரை இடமாற்றம் செய்து தென்மண்டல ஐ.ஜி. அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-09-22 00:45 GMT

பணியிட மாற்றம்

கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் வரதராஜன். அதே போலீஸ் நிலையத்தில் பூரணசந்திரன் என்பவர் ஏட்டாகவும், மணிகண்ட பிரபு போலீஸ்காரராகவும் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இவர்கள் 3 பேரையும் இடமாற்றம் செய்து தென்மண்டல ஐ.ஜி. நரேந்திரக் நாயர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் தென்காசி மாவட்டத்துக்கும், ஏட்டு பூரணசந்திரன் நெல்லை மாவட்டத்துக்கும், போலீஸ்காரர் மணிகண்டபிரபு தூத்துக்குடி மாவட்டத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உடனடியாக அவர்களை போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்து விடுவித்து, இடமாற்றம் செய்யப்பட்ட பணியிடங்களில் சேர வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பரபரப்பு

ஒரே போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் வெவ்வேறு மாவட்டங்களுக்கு திடீர் பணியிடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸ்தரப்பில் கேட்டபோது, 'கடமலைக்குண்டுவில் பணியாற்றிய நிலையில் சில குற்றச்சாட்டுகள் எழுந்ததாகவும், அதுகுறித்து தென்மண்டல ஐ.ஜி.க்கு தகவல் கிடைத்ததால், அவர்கள் உடனடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளதாகவும்' தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்